திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 380
- பால் – அறத்துப்பால்
- இயல் – ஊழியல்
- அதிகாரம் – ஊழ்
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.
மு. வரதராசன் உரை : ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.
சாலமன் பாப்பையா உரை : விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்; ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை?
கலைஞர் உரை : இயற்கை நிலையை மாற்றி மற்றொரு செயற்கை நிலையை அமைத்திட முனைந்தாலும், இயற்கை நிலையே முதன்மையாக வந்து நிற்பதால் அதைவிட வலிமையானவையாக வேறு எவை இருக்கின்றன?
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Oozhiyal ( Fate )
- Adikaram : Oozh ( Fate )
Tanglish :
Oozhir Peruvali Yaavula Matrondru
Soozhinun Thaanmun Thurum
Couplet :
What powers so great as those of Destiny? Man’s skillSome other thing contrives; but fate’s beforehand still
Translation :
What power surpasses fate? Its will Persists against the human skill
Explanation :
What is stronger than fate ? If we think of an expedient (to avert it), it will itself be with us before (the thought)