திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 830
- பால் – பொருட்பால்
- இயல் – நட்பியல்
- அதிகாரம் – கூடா நட்பு
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்.
மு. வரதராசன் உரை : பகைவர் நண்பராகும் காலம் வரும் போது முகத்தளவில் நட்பு கொண்டு அகத்தில் நட்பு நீங்கி வாய்ப்புக் கிடைத்த போது அதையும் விட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை : நம் பகைவர் நம்முடன் நண்பராக வாழும் காலம் வந்தால் நாமும் அவருடன் முகத்தால் நட்புக் கொண்டு மனத்தால் அந்நட்பை விட்டுவிட வேண்டும்.
கலைஞர் உரை : பகைவருடன் பழகிடும் காலம் வருமேயானால் அகத்தளவில் இல்லாமல் முகத்தளவில் மட்டும் நட்புச் செய்து பின்னர் நட்பையும் விட்டுவிட வேண்டும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Natpiyal ( Friendship )
- Adikaram : Kootaanatpu ( Unreal Friendship )
Tanglish :
Pakainatpaam Kaalam Varungaal Mukanattu
Akanatpu Oreei Vital
Couplet :
When time shall come that foes as friends appear,Then thou, to hide a hostile heart, a smiling face may’st wear
Translation :
When foes, in time, play friendship’s part Feign love on face but not in heart
Explanation :
When one’s foes begin to affect friendship, one should love them with one’s looks, and, cherishing no love in the heart, give up (even the former)