திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 88
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – விருந்தோம்பல்
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.
மு. வரதராசன் உரை : விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்திக்காத்துப் (பின்பு இழந்து) பற்றுக்கொடு இழந்தோமே என்று இரங்குவர்
சாலமன் பாப்பையா உரை : விருந்தினரைப் பேணி, அந்த யாகத்தின் பயனைப் பெறும் பேறு அற்றவர். செல்வத்தைச் சிரமப்பட்டுக் காத்தும் அதனை இழக்கும் போது, இப்போது எந்தத் துணையும் இல்லாதவராய்ப் போனோமே என்று வருந்துவர்.
கலைஞர் உரை : செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே என வருந்துவார்கள்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Virundhompal ( Hospitality )
Tanglish :
Parindhompip Patratrem Enpar Virundhompi
Velvi Thalaippataa Thaar
Couplet :
With pain they guard their stores, yet ‘All forlorn are we,’ they’ll cry,Who cherish not their guests, nor kindly help supply
Translation :
Who loathe guest-service one day cry: “We toil and store; but life is dry”
Explanation :
Those who have taken no part in the benevolence of hospitality shall (at length lament) saying, “we have laboured and laid up wealth and are now without support.”