திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 381
- பால் – பொருட்பால்
- இயல் – அரசியல்
- அதிகாரம் – இறைமாட்சி
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.
மு. வரதராசன் உரை : படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.
சாலமன் பாப்பையா உரை : வீரம் மிக்க படை, நாட்டுப்பற்று மிக்க மக்கள், எடுக்கக் குறையாத செல்வம், நாட்டின் நலம் அறிந்து செயல்படும் அமைச்சர், துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு, அழிக்கமுடியாத காவல் ஆறும் உடையதே அரசுகளில் சிங்கம் போன்றது.
கலைஞர் உரை : ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையா வளம், குறையற்ற அமைச்சு, முரிபடாத நட்பு, மோதியழிக்க முடியாத அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் உடையதே அரசுகளுக்கிடையே ஆண் சிங்கம் போன்ற அரசாகும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Arasiyal ( Royalty )
- Adikaram : Iraimaatchi ( The Greatness of a King )
Tanglish :
Pataikuti Koozhamaichchu Natparan Aarum
Utaiyaan Arasarul Eru
Couplet :
An army, people, wealth, a minister, friends, fort: six things-Who owns them all, a lion lives amid the kings
Translation :
People, troops, wealth, forts, council, friends Who owns these six is lion of kings
Explanation :
He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings