திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 372
- பால் – அறத்துப்பால்
- இயல் – ஊழியல்
- அதிகாரம் – ஊழ்
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை.
மு. வரதராசன் உரை : பொருள் இழந்தற்கு காரணமான ஊழ், பேதை யாக்கும் பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழ் அறிவைப் பெருக்கும்.
சாலமன் பாப்பையா உரை : தாழ்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு மனிதனைப் பேதை ஆக்கும்; உயர்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு விரிவு பெறும்.
கலைஞர் உரை : அழிவுதரும் இயற்கை நிலை, அறியாமையை உண்டாக்கும்; ஆக்கம் தரும் இயற்கை நிலை, அதற்கேற்ப அறிவை விரிவாக்கும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Oozhiyal ( Fate )
- Adikaram : Oozh ( Fate )
Tanglish :
Pedhaip Patukkum Izhavoozh Arivakatrum
Aakaloozh Utrak Katai
Couplet :
The fate that loss ordains makes wise men’s wisdom foolishness;The fate that gain bestows with ampler powers will wisdom bless
Translation :
Loss-fate makes a dull fool of us Gain-fate makes us prosperous, wise!
Explanation :
An adverse fate produces folly, and a prosperous fate produces enlarged knowledge