திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 475
- பால் – பொருட்பால்
- இயல் – அரசியல்
- அதிகாரம் – வலியறிதல்
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.
மு. வரதராசன் உரை : மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
சாலமன் பாப்பையா உரை : மயில்தோகைதானே என்று அதை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துபோகும்.
கலைஞர் உரை : மயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முரிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Arasiyal ( Royalty )
- Adikaram : Valiyaridhal ( The Knowledge of Power )
Tanglish :
Peelipey Saakaatum Achchirum Appantanjjch
Aala Mikuththup Peyin
Couplet :
With peacock feathers light, you load the wain;Yet, heaped too high, the axle snaps in twain
Translation :
Even the gentle peacock’s plume Cart’s axle breaks by gross volume
Explanation :
The axle tree of a bandy, loaded only with peacocks’ feathers will break, if it be greatly overloaded