திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 58
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – வாழ்க்கைத் துணைநலம்
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.
மு. வரதராசன் உரை : கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்.
சாலமன் பாப்பையா உரை : பெண்கள் இத்தனை சிறப்புகளையும் பெறுவார்கள் என்றால் தேவர்கள் வாழும் உலகில் மிகுந்த மேன்மையை அடைவார்கள்.
கலைஞர் உரை : நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக அமையும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Vaazhkkaith Thunainalam ( The Worth of a Wife )
Tanglish :
Petraar Perinperuvar Pentir Perunjirappup
Puththelir Vaazhum Ulaku
Couplet :
If wife be wholly true to him who gained her as his bride,Great glory gains she in the world where gods bliss abide
Translation :
Women who win their husbands’ heart Shall flourish where the gods resort
Explanation :
If women shew reverence to their husbands, they will obtain great excellence in the world where the gods flourish