திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 915
- பால் – பொருட்பால்
- இயல் – நட்பியல்
- அதிகாரம் – வரைவின் மகளிர்
பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்.
மு. வரதராசன் உரை : இயற்கை யறிவின் நன்மையால் சிறப்புற்ற அறிவுடையோர், பொருள் தருவார் எல்லார்க்கும் பொதுவாக இன்பம் தரும் மகளிரின் புன்மையான நலத்தைப் பொருந்தார்.
சாலமன் பாப்பையா உரை : இயல்பாகிய மதிநலத்தால் சிறந்த அறிவினை உடையவர், பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார்.
கலைஞர் உரை : இயற்கையறிவும் மேலும் கற்றுணர்ந்த அறிவும் கொண்டவர்கள் பொதுமகளிர் தரும் இன்பத்தில் மூழ்கமாட்டார்கள்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Natpiyal ( Friendship )
- Adikaram : Varaivinmakalir ( Wanton Women )
Tanglish :
Podhunalaththaar Punnalam Thoyaar Madhinalaththin
Maanta Arivi Navar
Couplet :
From contact with their worthless charms, whose charms to all are free,The men with sense of good and lofty wisdom blest will flee;
Translation :
The lofty wise will never covet The open charms of a vile harlot
Explanation :
Those whose knowledge is made excellent by their (natural) sense will not covet the trffling delights