திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1002
- பால் – பொருட்பால்
- இயல் – குடியியல்
- அதிகாரம் – நன்றியில் செல்வம்
பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு
மு. வரதராசன் உரை : பொருளால் எல்லாம் ஆகும் என்று பிறர்க்கு ஒன்றும் கொடுக்காமல் இறுகப்பற்றிய மயக்கத்தால் சிறப்பில்லாத பிறவி உண்டாம்.
சாலமன் பாப்பையா உரை : பொருளால் எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்று எண்ணி அதைத் தேடிய பின் தானும் அனுபவிக்காமல், பிறர் தேவைக்கும் அதைத் தராமல் கஞ்சனாக வாழ்பவனின் மயக்கத்தால் அவனுக்கு முழுமையற்ற பேய்ப்பிறப்பு உண்டாகும்.
கலைஞர் உரை : யாருக்கும் எதுவும் கொடுக்காமல், தன்னிடமுள்ள பொருளால் எல்லாம் ஆகுமென்று, அதனைவிடாமல் பற்றிக் கொண்டிருப்பவன் எந்தச் சிறப்புமில்லாத இழி பிறவியாவான்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Kudiyiyal ( Miscellaneous )
- Adikaram : Nandriyilselvam ( Wealth without Benefaction )
Tanglish :
Porulaanaam Ellaamendru Eeyaadhu Ivarum
Marulaanaam Maanaap Pirappu
Couplet :
Who giving nought, opines from wealth all blessing springs,Degraded birth that doting miser’s folly brings
Translation :
The niggard miser thinks wealth is all He hoards, gives not is born devil
Explanation :
He who knows that wealth yields every pleasure and yet is so blind as to lead miserly life will be born a demon