திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1323
- பால் – காமத்துப்பால்
- இயல் – கற்பியல்
- அதிகாரம் – ஊடலுவகை
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.
மு. வரதராசன் உரை : நிலத்தோடு நீர் பொருந்தி கலந்தாற் போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதை விட இன்பம் தருகின்ற தேவருலம் இருக்கின்றதோ.
சாலமன் பாப்பையா உரை : நிலத்தோடு நீர் கலந்தாற்போன்ற ஒற்றுமையை உடைய என்னவரோடு ஊடிப் பெறும் இன்பத்தைப் போலத் தேவர்கள் நாட்டு இன்பம் இருக்குமோ?
கலைஞர் உரை : நிலத்தோடு நீர் கலந்தது போல அன்புடன் கூடியிருக்கும் காதலரிடத்தில் ஊடல் கொள்வதை விடப் புதிய உலகம் வேறொன்று இருக்க முடியுமா?
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Karpiyal ( The Post-marital love )
- Adikaram : Ootaluvakai ( The Pleasures of Temporary Variance )
Tanglish :
Pulaththalin Puththelnaatu Unto Nilaththotu
Neeriyain Thannaar Akaththu
Couplet :
Is there a bliss in any world more utterly divine,Than ‘coyness’ gives, when hearts as earth and water join
Translation :
Is there a heaven like sulk beneath Of hearts that join like water and earth?
Explanation :
Is there a celestial land that can please like the feigned dislike of those whose union resembles that of earth and water?