திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1187
- பால் – காமத்துப்பால்
- இயல் – கற்பியல்
- அதிகாரம் – பசப்புறு பருவரல்
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.
மு. வரதராசன் உரை : தலைவனைத் தழுவிக் கிடந்தேன்; பக்கத்தே சிறிது அகன்றேன்; அவ்வளவிலேயே பசலை நிறம் அள்ளிக் கொள்வதுபோல் வந்து பரவி விட்டதே!
சாலமன் பாப்பையா உரை : முன்னொரு சமயம் நான் அவரைத் தழுவிக் கிடந்தேன்; கொஞ்சம் விலகினேன்; அவ்வளவுதான்; இந்தப் பசலை என்னை அப்படியே அள்ளிக் கொள்வது போல் வந்துவிட்டது.
கலைஞர் உரை : தழுவிக் கிடந்தேன்; சற்றுத் தள்ளிப் படுத்தேன்; அவ்வளவுதான்; என்னை அள்ளிக் கொண்டு விட்டதே பசலை நிறம்!
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Karpiyal ( The Post-marital love )
- Adikaram : Pasapparuparuvaral ( The Pallid Hue )
Tanglish :
Pullik Kitandhen Putaipeyarndhen Avvalavil
Allikkol Vatre Pasappu
Couplet :
I lay in his embrace, I turned unwittingly;Forthwith this hue, as you might grasp it, came on me
Translation :
From his embrace I turned a nonce This pallor swallowed me at once
Explanation :
I who was in close embrace just turned aside and the moment I did so, sallowness came on me like something to be seized on