திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 990
- பால் – பொருட்பால்
- இயல் – குடியியல்
- அதிகாரம் – சான்றாண்மை
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.
மு. வரதராசன் உரை : சான்றோரின் சால்பு நிறைந்த பண்பு குறைபடுமானால் இந்தப் பெரிய நிலவுலகமும் தன் பாரத்தைத் தாங்க முடியாமற் போய் விடும்.
சாலமன் பாப்பையா உரை : சான்றோர் தம் சான்றாண்மைப் பண்பிலிருந்து விலகிக் குறைவுபடுவார் என்றால், இப்பூவுலகம் தன் பாரம் தாங்காமல் அழியும்.
கலைஞர் உரை : சான்றோரின் நற்பண்பே குறையத்தொடங்கினால் அதனை இந்த உலகம் பொறுமையுடன் தாங்கிக் கொள்ளாது
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Kudiyiyal ( Miscellaneous )
- Adikaram : Saandraanmai ( Perfectness )
Tanglish :
Saandravar Saandraanmai Kundrin Irunilandhaan
Thaangaadhu Manno Porai
Couplet :
The mighty earth its burthen to sustain must cease,If perfect virtue of the perfect men decrease
Translation :
The world will not more bear its weight If from high virtue fall the great
Explanation :
If there is a defect in the character of the perfect, (even) the great world cannot bear (its) burden