திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 422
- பால் – பொருட்பால்
- இயல் – அரசியல்
- அதிகாரம் – அறிவுடைமை
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.
மு. வரதராசன் உரை : மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.
சாலமன் பாப்பையா உரை : மனம் சென்ற வழியெல்லாம் அதைச் செல்ல விடாமல், தீமையை விட்டு விலக்கி, நல்ல வழியில் நடத்துவது அறிவு.
கலைஞர் உரை : மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Arasiyal ( Royalty )
- Adikaram : Arivutaimai ( The Possession of Knowledge )
Tanglish :
Sendra Itaththaal Selavitaa Theedhoreei
Nandrinpaal Uyppa Tharivu
Couplet :
Wisdom restrains, nor suffers mind to wander where it would;From every evil calls it back, and guides in way of good
Translation :
Wisdom checks the straying senses Expels evils, impels goodness
Explanation :
Not to permit the mind to go where it lists, to keep it from evil, and to employ it in good, this is wisdom