திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 306
- பால் – அறத்துப்பால்
- இயல் – துறவறவியல்
- அதிகாரம் – வெகுளாமை
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.
மு. வரதராசன் உரை : சினம் என்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு ஒருவனுக்கு இனம் இன்பத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்.
சாலமன் பாப்பையா உரை : சேர்ந்தவரைக் கொல்லி எனப்படும் கோபம், சேர்ந்தவரை மட்டும் அன்று; சேர்ந்தவர்க்குத் துணையாக இருப்பவரையும் எரித்துவிடும்.
கலைஞர் உரை : சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Thuravaraviyal ( Ascetic Virtue )
- Adikaram : Vekulaamai ( Restraining Anger )
Tanglish :
Sinamennum Serndhaaraik Kolli Inamennum
Emap Punaiyaich Chutum
Couplet :
Wrath, the fire that slayeth whose draweth near,Will burn the helpful ‘raft’ of kindred dear
Translation :
Friend-killer is the fatal rage It burns the helpful kinship-barge
Explanation :
The fire of anger will burn up even the pleasant raft of friendship
Leave a Reply