திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 57
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – வாழ்க்கைத் துணைநலம்
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.
மு. வரதராசன் உரை : மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தான் காக்கும் கற்பே சிறிந்தது.
சாலமன் பாப்பையா உரை : இத்தனை குணங்களும் இருக்கும்படி பெண்ணைச் சிறை வைத்துக் காவல் காப்பதில் பயன் என்ன? பெண்கள் தங்களைத் தாங்களே மன அடக்கத்தால் காக்கும் காவலே முதன்மையானது.
கலைஞர் உரை : தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Vaazhkkaith Thunainalam ( The Worth of a Wife )
Tanglish :
Siraikaakkum Kaappevan Seyyum Makalir
Niraikaakkum Kaappe Thalai
Couplet :
Of what avail is watch and ward?Honour’s woman’s safest guard
Translation :
Of what avail are watch and ward? Their purity is women’s guard
Explanation :
What avails the guard of a prison ? The chief guard of a woman is her chastity