திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 18
- பால் – அறத்துப்பால்
- இயல் – பாயிரவியல்
- அதிகாரம் – வான்சிறப்பு
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
மு. வரதராசன் உரை : மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது
சாலமன் பாப்பையா உரை : மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது
கலைஞர் உரை : வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது?
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Paayiraviyal ( Prologue )
- Adikaram : Vaansirappu ( The Blessing of Rain )
Tanglish :
Sirappotu Poosanai Sellaadhu Vaanam
Varakkumel Vaanorkkum Eentu
Couplet :
If heaven grow dry, with feast and offering never more,Will men on earth the heavenly ones adore
Translation :
The earth, beneath a barren sky, Would offerings for the gods deny
Explanation :
If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to the celestials