திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 119
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – நடுவு நிலைமை
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.
மு. வரதராசன் உரை : உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.
சாலமன் பாப்பையா உரை : மனம் ஓரஞ் சாராமல் சமமாக நிற்குமானால் சொல்லிலும் அநீதி பிறக்காது; அதுவே நீதி.
கலைஞர் உரை : நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவர்க்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும் அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Natuvu Nilaimai ( Impartiality )
Tanglish :
Sorkottam Illadhu Seppam Orudhalaiyaa
Utkottam Inmai Perin
Couplet :
Inflexibility in word is righteousness,If men inflexibility of soul possess
Translation :
Justice is upright, unbending And free from crooked word-twisting
Explanation :
Freedom from obliquity of speech is rectitude, if there be (corresponding) freedom from bias of mind