திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 27
- பால் – அறத்துப்பால்
- இயல் – பாயிரவியல்
- அதிகாரம் – நீத்தார் பெருமை
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
மு. வரதராசன் உரை : சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.
சாலமன் பாப்பையா உரை : சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களின் வழிப் பிறக்கும் ஆசைகளை அறுத்து எறிபவனின் வசப்பட்டதே இவ்வுலகம்.
கலைஞர் உரை : ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Paayiraviyal ( Prologue )
- Adikaram : Neeththaar Perumai ( The Greatness of Ascetics )
Tanglish :
Suvaioli Ooruosai Naatramendru Aindhin
Vakaidherivaan Katte Ulaku
Couplet :
Taste, light, touch, sound, and smell: who knows the wayOf all the five,- the world submissive owns his sway
Translation :
They gain the world, who grasp and tell Of taste, sight, hearing, touch and smell
Explanation :
The world is within the knowledge of him who knows the properties of taste, sight, touch, hearing and smell