திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 436
- பால் – பொருட்பால்
- இயல் – அரசியல்
- அதிகாரம் – குற்றங்கடிதல்
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு?
மு. வரதராசன் உரை : முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கி பிறகு பிறருடையக் குற்றத்தை ஆராயவல்லவனானால், தலைவனுக்கு என்ன குற்றமாகும்.
சாலமன் பாப்பையா உரை : முதலில் தன் குற்றத்தைக் கண்டு விலக்கிப் பிறகு அடுத்தவர் குற்றத்தைக் காணும் ஆற்றல் மிக்க அரசிற்குக் குற்றம் ஏதும் வராது!
கலைஞர் உரை : முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்?
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Arasiyal ( Royalty )
- Adikaram : Kutrangatidhal ( The Correction of Faults )
Tanglish :
Thankutram Neekkip Pirarkutrang Kaankirpin
Enkutra Maakum Iraikku?
Couplet :
Faultless the king who first his own faults cures, and thenPermits himself to scan faults of other men
Translation :
What fault can be the king’s who cures First his faults, then scans others
Explanation :
What fault will remain in the king who has put away his own evils, and looks after the evils of others