திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 249
- பால் – அறத்துப்பால்
- இயல் – துறவறவியல்
- அதிகாரம் – அருளுடைமை
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.
மு. வரதராசன் உரை : அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை : மனத்துள் அருள் இல்லாதவன் செய்யும் அறத்தை ஆராய்ந்து பார்த்தால், ஞானம் இல்லாதவன் மெய்ப்பொருளை உணர்ந்தது போல ஆகும்.
கலைஞர் உரை : அறிவுத் தெளிவு இல்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டறிய முடியுமா? அது போலத்தான் அருள் இல்லாதவன் செய்யும் அறச்செயலும் இருக்கும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Thuravaraviyal ( Ascetic Virtue )
- Adikaram : Arulutaimai ( Compassion )
Tanglish :
Therulaadhaan Meypporul Kantatraal Therin
Arulaadhaan Seyyum Aram
Couplet :
When souls unwise true wisdom’s mystic vision see,The ‘graceless’ man may work true works of charity
Translation :
Like Truth twisted by confused mind Wisdom is vain in hearts unkind
Explanation :
If you consider, the virtue of him who is without kindness is like the perception of the true being by him who is without wisdom