திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 926
- பால் – பொருட்பால்
- இயல் – நட்பியல்
- அதிகாரம் – கள்ளுண்ணாமை
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
மு. வரதராசன் உரை : உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவுமயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர்.
சாலமன் பாப்பையா உரை : உறங்குபவர், இறந்துபோனவரிலும் வேறுபட்டவர் அல்லர்; அதுபோலவே, எப்போதும் போதைப் பொருளைப் பயன்படுத்துபவர் நஞ்சு உண்பவரிலும் வேறுபட்டவர் அல்லர்.
கலைஞர் உரை : மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Natpiyal ( Friendship )
- Adikaram : Kallunnaamai ( Not Drinking Palm-Wine )
Tanglish :
Thunjinaar Seththaarin Verallar Egngnaandrum
Nanjunpaar Kallun Pavar
Couplet :
Sleepers are as the dead, no otherwise they seem;Who drink intoxicating draughts, they poison quaff, we deem
Translation :
They take poison who take toddy And doze ev’n like a dead body
Explanation :
They that sleep resemble the deed; (likewise) they that drink are no other than poison-eaters