திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 442
- பால் – பொருட்பால்
- இயல் – அரசியல்
- அதிகாரம் – பெரியாரைத் துணைக்கோடல்
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
மு. வரதராசன் உரை : வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை : வந்த துன்பங்களைப் போக்கும் வழி அறிந்து போக்கி, அவை திரும்பவும் வராமல் முன்னதாகவே காக்கும் ஆற்றல் மிக்கவரை, அவருக்கு வேண்டியதைச் செய்து, துணையாகப் பெறுக.
கலைஞர் உரை : வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Arasiyal ( Royalty )
- Adikaram : Periyaaraith Thunaikkotal ( Seeking the Aid of Great Men )
Tanglish :
Utranoi Neekki Uraaamai Murkaakkum
Petriyaarp Penik Kolal
Couplet :
Cherish the all-accomplished men as friends,Whose skill the present ill removes, from coming ill defends
Translation :
Cherish the help of men of skill Who ward and safe-guard you from ill
Explanation :
Let (a king) procure and kindly care for men who can overcome difficulties when they occur, and guard against them before they happen