திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 11
- பால் – அறத்துப்பால்
- இயல் – பாயிரவியல்
- அதிகாரம் – வான்சிறப்பு
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
மு. வரதராசன் உரை : மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்
சாலமன் பாப்பையா உரை : உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்
கலைஞர் உரை : உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Paayiraviyal ( Prologue )
- Adikaram : Vaansirappu ( The Blessing of Rain )
Tanglish :
Vaannindru Ulakam Vazhangi Varudhalaal
Thaanamizhdham Endrunarar Paatru
Couplet :
The world its course maintains through life that rain unfailing gives;Thus rain is known the true ambrosial food of all that lives
Translation :
The genial rain ambrosia call: The world but lasts while rain shall fall
Explanation :
By the continuance of rain the world is preserved in existence; it is therefore worthy to be called ambrosia