திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1193
- பால் – காமத்துப்பால்
- இயல் – கற்பியல்
- அதிகாரம் – தனிப்படர் மிகுதி
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு.
மு. வரதராசன் உரை : காதலரால் விரும்பப்படுகின்றவர்க்கும் ( பிரிவுத் துன்பம் இருந்தாலும்) மீண்டும் வந்தபின் வாழ்வோம் என்று இருக்கும் செருக்குத் தகும்.
சாலமன் பாப்பையா உரை : தாம் விரும்பும் கணவனால் விரும்பப்பட்ட பெண்ணுக்கே (எப்படியும் விரைவில் அவர் வருவார் என்ற உறுதியினால்) வாழ்வோம் என்னும் செருக்கு, பொருத்தமாக இருக்கும்.
கலைஞர் உரை : காதலன்பில் கட்டுண்டு பிரியாமல் இணைந்திருப்பவர்களுக்குத்தான் இன்புற்று வாழ்கிறோம் எனும் பெருமிதம் ஏற்படும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Karpiyal ( The Post-marital love )
- Adikaram : Thanippatarmikudhi ( The Solitary Anguish )
Tanglish :
Veezhunar Veezhap Patuvaarkku Amaiyume
Vaazhunam Ennum Serukku
Couplet :
Who love and are beloved to them aloneBelongs the boast, ‘We’ve made life’s very joys our own.’
Translation :
The pride of living is for those Whose love is returned by love so close
Explanation :
The pride that says “we shall live” suits only those who are loved by their beloved (husbands)