திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 143
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – பிறனில் விழையாமை
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்து ஒழுகு வார்.
மு. வரதராசன் உரை : ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர்.
சாலமன் பாப்பையா உரை : தன்னைச் சந்தேகப்படாதவரின் வீட்டிற்குள் நுழைந்து, அடுத்தவரின் மனைவியுடன் தவறான தொடர்பு கொண்டு வாழ்பவன், இறந்து போனவனே அன்றி உயிருடன் வாழ்பவன் அல்லன்
கலைஞர் உரை : நம்பிக் பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில் ஈடுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Piranil Vizhaiyaamai ( Not coveting another”s Wife )
Tanglish :
Vilindhaarin Verallar Mandra Thelindhaaril
Theemai Purindhu Ozhuku Vaar
Couplet :
They’re numbered with the dead, e’en while they live, -how otherwise?With wife of sure confiding friend who evil things devise
Translation :
The vile are dead who evil aim And put faithful friends’ wives to shame
Explanation :
Certainly they are no better than dead men who desire evil towards the wife of those who