இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை. | குறள் எண் - 153

Thirukkural Tamil & English Definition
திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார் க்கப் போகும் குறள்.
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை.
கலைஞர் உரை
"வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது அதைப் போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது"
மு. வரதராசன் உரை
"வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்."
சாலமன் பாப்பையா உரை
"வறுமையுள் வறுமை, வந்த விருந்தினரை உபசரிக்காதது; வலிமையுள் வலிமை அற்றவரின் ஆத்திர மூட்டல்களைப் பொறுத்துக் கொள்வது"
பாரி மேலகர் உரை
"பரிமேலழகர் உரை: இன்மையுள் இன்மை விருந்து ஒரால்-ஒருவனுக்கு வறுமையுள் வைத்து வறுமையாவது விருந்தினரை ஏற்றுக் கொள்ளாது நீக்குதல்; வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை-அதுபோல வன்மையுள் வைத்து வன்மையாவது அறிவின்மையான் மிகை செய்தாரைப் பொறுத்தல். [இஃது எடுத்துக்காட்டு உவமை. அறன் அல்லாத விருந்து ஒரால் பொருளுடைமை ஆகாதவாறுபோல, மடவார்ப் பொறையும் மென்மையாகாதே வன்மையாம் என்பது கருத்து.]. "
மணி குடவர் உரை
"மணக்குடவர் உரை: வலிமையின்மையுள் வைத்து வலியின்மையாவது புதுமையை நீக்காமை: வலியுடைமையுள் வைத்து வலியுடைமையாவது அறியாதாரைப் பொறுத்தல். புதுமை யென்றது கேட்டறியாதது. நீக்காமை- பொறுமை. "
வி முனுசாமி உரை
"திருக்குறளார் வீ. முனிசாமி உரை: ஒருவனுக்கு வறுமையுள் மிகவும் வறுமையாவது விருந்தினரைப் போற்றாமல் நீக்குதலாகும். அதுபோல வல்லமையுள் மிகவும் வல்லமையாவது அறியாமையால் தீங்கு செய்தவர்களை பொறுத்துக்கொள்ளுவதாகும். "
Inmaiyul Inmai Virundhoraal Vanmaiyul Vanmai Matavaarp Porai
Couplet
The sorest poverty is bidding guest unfed depart;The mightiest might to bear with men of foolish heart
Translation
Neglect the guest is dearth of dearth To bear with fools is strength of strength
Explanation
To neglect hospitality is poverty of poverty To bear with the ignorant is might of might
Write Your Comment