திருக்குறள் 1145: களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் — வெளிப்படுந் தோறும் இனிது.

Thirukkural Verse 1145

திருக்குறள் 1145 — அலர் அறிவுறுத்தல் (The Announcement of the Rumour), காமத்துப்பால்.

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்

வெளிப்படுந் தோறும் இனிது.

கலைஞர் உரை

காதல் வெளிப்பட வெளிப்பட இனிமையாக இருப்பது கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளையே விரும்புவது போன்றதாகும்

மு. வரதராசன் உரை

காமம் அலரால் வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக் கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை

கள் உண்பவர்களுக்குக் குடித்து மகிழும்போது எல்லாம் கள் உண்பது இனிதாவது போல் எங்கள் காதல் ஊருக்குள் பேசப்படும்போது எல்லாம் மனத்திற்கு இனிதாய் இருக்கின்றது.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) களித்தொறும் கள் உண்டல் வேட்டற்று - கள்ளுண்பார்க்குக் களிக்குந்தோறும் கள்ளுண்டல் இனிதாமாறு போல; காமம் வெளிப்படுந்தோறும் இனிது - எனக்குக் காமம் அலராந்தோறும் இனிதாகா நின்றது. ('வேட்கப்பட்டடற்றால்' என்பது 'வேட்டற்றால்' என நின்றது. வேட்கை மிகுதியால் அலரும் இன்பஞ் செய்யாநின்றது என்பதாம்.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: மயங்குந்தோறும் கள்ளுண்டலை விரும்பினாற்போலக் காமமும் அலராகுந்தோறும் இனிதாகும். இஃது அலரறிவுறுத்த தோழியை நோக்கி நுமக்குத் துன்ப மாயிற்றே இவ்வலரென்று வினாவிய தலைமகற்குத் தோழி கூறியது.

வீ. முனிசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: கள் உண்பவர்களுக்குக் களிக்கும் போதெல்லாம் கள்ளுண்டல் இனிதாவதைப்போல எனக்குக் காமம் அலரால் வெளிப்படும்போதெல்லாம் இனிமையானதாக இருக்கின்றது.

Kaliththorum Kalluntal Vettatraal Kaamam

Velippatun Thorum Inidhu

Couplet

The more man drinks, the more he ever drunk would be;The more my love's revealed, the sweeter 'tis to me

Translation

Drink delights as liquor flows Love delights as rumour grows

Explanation

As drinking liquor is delightful (to one) whenever one is in mirth, so is lust delightful to me whenever it is the subject of rumour

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

மடிதற்றுத் தான்முந் துறும்.

Kutiseyval Ennum Oruvarkuth Theyvam

Matidhatruth Thaanmun Thurum

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.