திருக்குறள் 1146: கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் — திங்களைப் பாம்புகொண் டற்று.

Thirukkural Verse 1146

திருக்குறள் 1146 — அலர் அறிவுறுத்தல் (The Announcement of the Rumour), காமத்துப்பால்.

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்

திங்களைப் பாம்புகொண் டற்று.

கலைஞர் உரை

காதலர் சந்தித்துக் கொண்டது ஒருநாள்தான் என்றாலும், சந்திரனைப் பாம்பு விழுங்குவதாகக் கற்பனையாகக் கூறப்படும் ``கிரகணம்'' எனும் நிகழ்ச்சியைப் போல அந்தச் சந்திப்பு ஊர் முழுவதும் அலராகப் பரவியது

மு. வரதராசன் உரை

காதலரைக் கண்டது ஒருநாள் தான், அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் எங்கும் பரந்து விட்டது.

சாலமன் பாப்பையா உரை

நான் அவரைப் பார்த்ததும் பேசியதும் கொஞ்சமே! ஆனால் இந்த ஊரார் பேச்சோ நிலவைப் பாம்பு பிடித்ததுபோல் ஊர் முழுக்கப் பரவிவிட்டதே!

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: (இடையீடுகளானும் அல்ல குறியானும் தலைமகனை எய்தப்பெறாத தலைமகள், அவன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய் அலரறிவுறீஇ வரைவு கடாயது.) கண்டது ஒரு நாள் - யான் காதலரைக் கண்ணுறப்பெற்றது ஒரு ஞான்றே; அலர் திங்களைப் பாம்பு கொண்டற்று -அதனினாய அலர் அவ்வளவிற்றன்றித் திங்களைப் பாம்பு கொண்ட அலர் போன்று உலகமெங்கும் பரந்தது. (காரியத்தைக் காரணமாக உபசரித்து, 'பாம்பு கொண்டற்று' என்றாள். இருவழியும் மன்னும், உம்மையும் அசைநிலை. 'காட்சியின்றியும் அலர் பரக்கின்ற இவ்வொழுக்கம் இனியாகாது, வரைந்து கோடல் வேண்டும்', என்பதாம்.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: யான் கண்ணுற்றது ஒருநாள்; அக்காட்சி திங்களைப் பாம்பு கொண்டாற்போல, எல்லாரானும் அறியப்பட்டு அலராகா நின்றது.

வீ. முனிசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: யாம் காதலரைக் கண்டது ஒரு நாளேயாகும். அதனால் உண்டாகிவிட்ட அலர் அந்த அளவின்றிக் திங்களைப் பாம்பு கொண்ட அலர் போன்று எங்கும் பரவிவிட்டது.

Kantadhu Mannum Orunaal Alarmannum

Thingalaip Paampukon Tatru

Couplet

I saw him but one single day: rumour spreads soonAs darkness, when the dragon seizes on the moon

Translation

One lasting day we met alone Lasting rumours eclipse our moon

Explanation

It was but a single day that I looked on (my lover); but the rumour thereof has spread like the seizure of the moon by the serpent

Comments (1)

Anay Sheth
Anay Sheth
anay sheth verified

1 year ago

Really appreciate the wisdom here. Makes me want to follow this guidance in daily life.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்

பழிகாணேன் கண்ட இடத்து.

Ezhudhungaal Kolkaanaak Kannepol Konkan

Pazhikaanen Kanta Itaththu

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.