மலரன்ன கண்ணாள் அருமை அறியாது — அலரெமக்கு ஈந்ததிவ் வூர். | குறள் எண் - 1142

Thirukkural Verse 1142

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.

மலரன்ன கண்ணாள் அருமை அறியாது

அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.

கலைஞர் உரை

அந்த மலர்விழியாளின் மாண்பினை உணராமல் எம்மிடையே காதல் என்று இவ்வூரார் பழித்துரைத்தது மறைமுக உதவியாகவே எமக்கு அமைந்தது

மு. வரதராசன் உரை

மலர் போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர்.

சாலமன் பாப்பையா உரை

மலர் போன்ற கண்களை உடையவளை நான் சந்திக்க வாய்ப்பு இல்லாததைத் தெரிந்து கொள்ளாமல் இந்த ஊர் எங்கள் காதலைப் பேசியே எங்களுக்கு நன்மை செய்துவிட்டது.

பாரி மேலகர் உரை

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது - மலர்போலும் கண்ணையுடையாளது எய்தற்கு அருமை அறியாது; இவ்வூர் அலர் எமக்கு ஈந்தது - இவ்வூர் அவளை எளியளாக்கி அவளோடு அலர் கூறலை எமக்கு உபகரித்தது. (அருமை: அல்ல குறிப்பாட்டானும் இடையீடுகளானும் ஆயது. 'ஈந்தது' என்றான், தனக்குப் பற்றுக்கோடாகலின், அலர் கூறுவாரை அவர் செய்த உதவி பற்றி 'இவ்வூர்' என்றான்.).

மணி குடவர் உரை

மணக்குடவர் உரை: பூவொத்த கண்ணாளது இற்பிறப்பின் அருமையை யறியாதே, இவ்வூரவர் எங்கட்கு அலரைத் தந்தார். எளியாரைச் சொல்லுமாறுபோலச் சொல்லாநின்றா ரென்றவாறு.

வி முனுசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: மலர்போன்ற கண்ணினையுடைய இப்பெண்ணின் அருமையினை அறிந்து கொள்ளாமல் இவ்வூர் அப்பெண்ணை எளியவளாகக் கருதி அலர் கூறுவதைச் செய்தது.

Malaranna Kannaal Arumai Ariyaadhu

Alaremakku Eendhadhiv Voor

Couplet

The village hath to us this rumour giv'n, that makes her mine;Unweeting all the rareness of the maid with flower-like eyne

Translation

Rumour gives me the flower-like belle People know not what rare angel

Explanation

Not knowing the value of her whose eyes are like flowers this town has got up a rumour about me

Comments (2)

Aniruddh Mammen
Aniruddh Mammen
aniruddh mammen verified

4 weeks ago

This verse speaks volumes. We need more reminders like this in today’s fast-paced world.

Himmat Dhar
Himmat Dhar
himmat dhar verified

4 weeks ago

I find this poem very motivating. It pushes us to be more honest and kind in our actions.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்

ஈதல் இயையாக் கடை.

Saadhalin Innaadha Thillai Inidhadhooum

Eedhal Iyaiyaak Katai

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.