திருக்குறள் 1143: உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப் — பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

Thirukkural Verse 1143

திருக்குறள் 1143 — அலர் அறிவுறுத்தல் (The Announcement of the Rumour), காமத்துப்பால்.

உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்

பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

கலைஞர் உரை

எமது காதலைப்பற்றி ஊரறியப் பேச்சு எழாதா? அந்தப் பேச்சு, இன்னும் எமக்குக் கிட்டாத காதல் கிட்டியது போன்று இன்பத்தைத் தரக்கூடியதாயிற்றே!

மு. வரதராசன் உரை

ஊரார் எல்லோரும் அறிந்துள்ள அலர் நமக்குப் பொருந்தாதோ, (பொருந்தும்) அந்த அலர் பெறமுடியாமலிருந்து பெற்றார் போன்ற நன்மை உடையதாக இருக்கின்றது.

சாலமன் பாப்பையா உரை

எங்களக்குள் காதல் இருப்பதை இந்த ஊர் அறிந்து பேசியதும் நல்லதே, (திருமணத்தைச்) செய்ய முடியுமா என்றிருந்த நிலை போய்ச் செய்தது போல் ஆயிற்று.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) ஊர் அறிந்த கௌவை உறாஅதோ - எங்கட்குக் கூட்டம் உண்மை இவ்வூர் அறிதலான் விளைந்த அலர் எனக்கு உறுவதொன்றன்றோ; அதனைப் பெறாது பெற்றன்ன நீர்த்து - அது கேட்ட என் மனம் அக்கூட்டத்தைப் பெறாதிருந்தே பெற்றாற்போலும் நீர்மையுடைத்து ஆகலான். (பெற்றன்ன நீர்மை: பெற்றவழி உளதாம் இன்பம் போலும் இன்பமுடைமை. 'நீர்த்து' என்பதற்கு ஏற்ற 'மனம்' என்னும் வினைமுதல் வருவிக்கப்பட்டது.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: ஊரறிந்த அலர் வருவதொன்றன்றோ? அவ்வலரைத் தீதாகக் கொள்ளாது, பெறாததொன்றைப் பெற்றாலொத்த நீர்மைத்தாகக் கொள்ளல் வேண்டும். இஃது அலரறிவுறுத்த தோழிக்கு அவ்வலரினான் என்றும் தமராவார் உடன்படுவரென்று தலைமகன் கூறியது.

வீ. முனிசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: எங்கள் காதல் உண்மையினை இவ்வூர் அறிதலால் உண்டான அலர் எனக்குத் தேவைப்பட்டதேயாகும். அதுகேட்ட என் மனம் அவளுடன் கூடுவதைப் பெறாதிருந்தும் பெற்றது போன்ற தன்மையை அடைகின்றது.

Uraaadho Oorarindha Kelavai Adhanaip

Peraaadhu Petranna Neerththu

Couplet

The rumour spread within the town, is it not gain to me?It is as though that were obtained that may not be

Translation

I profit by this public rumour Having not, I feel, I have her

Explanation

Will I not get a rumour that is known to the (whole) town ? For what I have not got is as if I had got it (already)

Comments (1)

Dharmajan Brahmbhatt
Dharmajan Brahmbhatt
dharmajan brahmbhatt verified

1 year ago

This verse speaks volumes. We need more reminders like this in today’s fast-paced world.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்

திருநீக்கப் பட்டார் தொடர்பு.

Irumanap Pentirum Kallum Kavarum

Thiruneekkap Pattaar Thotarpu

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.