இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே — ஏதிலர் என்னும் இவ் வூர். | குறள் எண் - 1129

Thirukkural Verse 1129

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.

இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே

ஏதிலர் என்னும் இவ் வூர்.

கலைஞர் உரை

கண்ணுக்குள் இருக்கும் காதலர் மறைவார் என அறிந்து கண்ணை இமைக்காமல் இருக்கின்றேன்; அதற்கே இந்த ஊர் தூக்கமில்லாத துன்பத்தை எனக்குத் தந்த அன்பில்லதாவர் என்று அவரைக் கூறும்

மு. வரதராசன் உரை

கண் இமைத்தால் காதலர் மறைந்து போதலை அறிகின்றேன், அவ்வளவிற்கே இந்த ஊரார் அவரை அன்பில்லாதவர் என்று சொல்லுவர்.

சாலமன் பாப்பையா உரை

என் கண்கள் இமைத்தால் உள்ளிருக்கும் என்னவர் மறைவதை அறிந்து நான் கண்களை இமைப்பதில்லை. இதை விளங்கிக் கொள்ளாத உறவினர் அவரை அன்பற்றவர் என்கின்றனர்.

பாரி மேலகர் உரை

பரிமேலழகர் உரை: (வரைவிடை வைத்துப் பிரிவின்கண் தலைமகளாற்றுதற் பொருட்டுத் தோழி தலைமகனை இயற்பழித்தவழி அவள் இயற்பட மொழிந்தது.) இமைப்பிற் கரப்பார்க்கு அறிவல் - என்கண் இமைக்குமாயின் உள்ளிருக்கின்ற காதலர் மறைதலை அறிந்து இமையேன்; அனைத்திற்கே ஏதிலர் என்னும் இவ்வூர் - அவ்வளவிற்கு அவரைத் துயிலா நோய்செய்தார் அன்பிலர் என்று சொல்லாநிற்கும் இவ்வூர். (தன் கருத்து அறியாமை பற்றிப் புலந்து சொல்லுகின்றாள் ஆகலின், தோழியை வேறுபடுத்து, 'இவ்வூர்' என்றாள். 'ஒரு பொழுதும்' பிரியாதவரைப் பிரிந்தார் என்று பழிக்கற்பாலையல்லை', என்பதாம்.).

மணி குடவர் உரை

மணக்குடவர் உரை: கண்ணிமைக்குமாயின் அவரொளிக்குமது யானறிவேன், அவ்வொளித்தற்கு அவரை நமக்கு ஏதிலரென்று சொல்லும் இவ்வூர்; அதற்காக இமைக்கிலன். இது கண் துயில்மறுத்தலென்னும் மெய்ப்பாடு.

வி முனுசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: எனது கண்கள் இமைக்குமாயின் உள்ளிருக்கின்ற என் காதலர் மரத்தலையறிந்து இமைக்காமல் இருப்பேன். இமையாதிருப்பதைக் கண்டா இவ்வூர் மக்கள் அவரைத் தூங்காத னாய் செய்தார் என்று கூறுகிறார்கள்.

Imaippin Karappaakku Arival Anaiththirke

Edhilar Ennum Iv Voor

Couplet

I fear his form to hide, nor close my eyes:'Her love estranged is gone!' the village cries

Translation

My eyes wink not lest he should hide And him as cruel the townsmen chide

Explanation

I will not wink, knowing that if I did, my lover would hide himself; and for this reason, this town says, he is unloving

Comments (1)

Anaya Dixit
Anaya Dixit
anaya dixit verified

4 weeks ago

This Kural offers profound wisdom about life. It truly reflects the values we should carry every day. It's amazing how relevant this remains even in modern times.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை

அன்றே யொழிய விடல்.

Nandre Tharinum Natuvikandhaam Aakkaththai

Andre Yozhiya Vital

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.