திருக்குறள் 1117: அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் க்குப் போல — மறுவுண்டோ மாதர் முகத்து.

Thirukkural Verse 1117

திருக்குறள் 1117 — நலம் புனைந்து உரைத்தல் (The Praise of her Beauty), காமத்துப்பால்.

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் க்குப் போல

மறுவுண்டோ மாதர் முகத்து.

கலைஞர் உரை

தேய்ந்தும், வளர்ந்தும் ஒளிபொழியும் நிலவில் உள்ள சிறுகளங்கம்கூட, இந்த மங்கை நல்லாள் முகத்தில் கிடையாதே!

மு. வரதராசன் உரை

குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம் உள்ளது போல் இந்த மாதர் முகத்தில் களங்கம் உண்டோ.இல்லையே.

சாலமன் பாப்பையா உரை

நட்சத்திரங்கள் ஏன் கலங்க வேண்டும்? தேய்ந்து முழுமை பெறும் ஒளிமிக்க நிலாவில் இருப்பது போல என் மனைவியின் முகத்தில் மறு ஏதும் உண்டா என்ன?

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) (அம்மீன்கள் அங்ஙனம் கலங்குதற்குக் காரணம் யாது?) அறுவாய் நிறைந்த அவிர் மதிக்குப்போல - முன் குறைந்த இடம் வந்து நிரம்பியே விளங்கும் மதிக்கண் போல; மாதர் முகத்து மறு உண்டோ - இம்மாதர் முகத்து மறு உண்டோ? (இடம் - கலை, மதிக்கு என்பது வேற்றுமை மயக்கம். தேய்தலும் வளர்தலும் மறுவுடைமையும் இன்மை பற்றி வேறுபாடறியலாயிருக்க அறிந்தில என இகழ்ந்து கூறியவாறு.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: குறையிடை நிறைந்த ஒளிர்மதிக்குப்போல இம்மாதர் முகத்துக்கு மறுவுண்டோ?. இது மேல் கலக்கமுற்றுத் திரிகின்ற மீன் கலங்குதற்குக் காரணம் அறிவின்மையாம்; இவள் முகத்து மறுவில்லையாதலான் அது மதியோடு ஒவ்வாதென்று கூறியது.

Aruvaai Niraindha Avirmadhikkup Pola

Maruvunto Maadhar Mukaththu

Couplet

In moon, that waxing waning shines, as sports appear,Are any spots discerned in face of maiden here

Translation

Are there spots on the lady's face Just as in moon that changes phase?

Explanation

Could there be spots in the face of this maid like those in the bright full moon ?

Comments (1)

Kavya Sridhar
Kavya Sridhar
kavya sridhar verified

1 year ago

Really appreciate the wisdom here. Makes me want to follow this guidance in daily life.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை.

Thurandhaarkkum Thuvvaa Dhavarkkum Irandhaarkkum

Ilvaazhvaan Enpaan Thunai

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.