திருக்குறள் 1118: மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் — காதலை வாழி மத.
திருக்குறள் 1118 — நலம் புனைந்து உரைத்தல் (The Praise of her Beauty), காமத்துப்பால்.
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மத.
கலைஞர் உரை
முழுமதியே! என் காதலுக்குரியவளாக நீயும் ஆக வேண்டுமெனில், என் காதலியின் முகம் போல ஒளிதவழ நீடு வாழ்வாயாக
மு. வரதராசன் உரை
திங்களே! இம் மாதரின் முகத்தைப் போல உண்ணால் ஒளி வீச முடியுமானால், நீயும் இவள் போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய்.
சாலமன் பாப்பையா உரை
நிலவே! நீ வாழ்க! என் மனைவியின் முகம்போல் நான் மகிழும்படி ஒளிவீசுவாய் என்றால் நீயும் என் காதலைப் பெறுவாய்.
பரிமேலழகர் உரை
பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) மதி வாழி - மதியே வாழ்வாயாக; மாதர் முகம் போல ஒளி விடவல்லையேல் காதலை - இம்மாதர்முகம் போல யான் மகிழும் வகை ஒளிவீச வல்லையாயின், நீயும் என் காதலையுடையையாதி ('மறு உடைமையின் அது மாட்டாய்; மாட்டாமையின் என்னால் காதலிக்கவும்படாய்', என்பதாம். 'வாழி' இகழ்ச்சிக் குறிப்பு.).
மணக்குடவர் உரை
மணக்குடவர் உரை: மதியே! நீ இம்மாதர் முகம்போல ஒளிவிட வல்லையாயின் நீயும் எம்மாற் காதலிக்கப்படுதி. வாழி- அசை. இது மறுப்போயினதாய முகமென்று கூறப்பட்டது.
Maadhar Mukampol Olivita Vallaiyel
Kaadhalai Vaazhi Madhi
Couplet
Farewell, O moon! If that thine orb could shineBright as her face, thou shouldst be love of mine
Translation
Like my lady's face if you shine All my love to you; hail O moon!
Explanation
If you can indeed shine like the face of women, flourish, O moon, for then would you be worth loving ?
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
Piranmanai Nokkaadha Peraanmai Saandrorkku
Aranondro Aandra Vozhukku
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.