திருக்குறள் 1216: நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால் — காதலர் நீங்கலர் மன்.
திருக்குறள் 1216 — கனவுநிலை உரைத்தல் (The Visions of the Night), காமத்துப்பால்.
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.
கலைஞர் உரை
நனவு மட்டும் திடிரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில் சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே
மு. வரதராசன் உரை
நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பர்.
சாலமன் பாப்பையா உரை
கண்ணால் காண்பது என்றொரு கொடிய பாவி இல்லை என்றால் கனவிலே வந்து கூடிய என்னவர் என்னைப் பிரிய மாட்டார்.
பரிமேலழகர் உரை
பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) நனவென ஒன்று இல்லையாயின் - நனவு என்று சொல்லப்படுகின்ற ஒரு பாவி இல்லையாயின்; கனவினான் காதலர் நீங்கலர் - கனவின்கண் வந்து கூடிய காதலர் என்னைப் பிரியார். ('ஒன்று' என்பது, அதன் கொடுமை விளக்கி நின்றது. அஃது இடையே புகுந்து கனவைப் போக்கி அவரைப் பிரிவித்தது என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. கனவிற் பெற்று ஆற்றுகின்றமை கூறியவாறு.).
மணக்குடவர் உரை
மணக்குடவர் உரை: நனவென்று சொல்லப்படுகின்ற ஒருபாவி இல்லையாயின் கனவின்கண் வந்து கூடிய காதலர் என்னைப் பிரியார்.
வீ. முனிசாமி உரை
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: நனவு என்று சொல்லப்படுகின்ற ஒரு பாவி இல்லையாயின் கனவிலே வந்து கூடிய காதலர் என்னைப் பிரியார்.
Nanavena Ondrillai Aayin Kanavinaal
Kaadhalar Neengalar Man
Couplet
And if there were no waking hour, my loveIn dreams would never from my side remove
Translation
If wakeful hours come to nought My lov'r in dreams would nev'r depart
Explanation
Were there no such thing as wakefulness, my beloved (who visited me) in my dream would not depart from me
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.
Ollum Karumam Utatru Pavarkenmai
Sollaataar Sora Vital
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.
Aarush Yogi
1 year ago
This Kural offers profound wisdom about life. It truly reflects the values we should carry every day. It's amazing how relevant this remains even in modern times.