நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது. | குறள் எண் - 1215

nanavinaal-kantadhooum-aange-kanavundhaan-kanta-pozhudhe-inidhu-1215

56

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.

"காதலரை நேரில் கண்ட இன்பம் அப்போது இனிமை வழங்கியது போலவே, இப்போது அவரைக் கனவில் காணும் இன்பமும் இனிமை வழங்குகிறது!"

கலைஞர் உரை

"முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனிதாயிற்று; இப்‌பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது."

மு. வரதராசன் உரை

"முன்பு அவரை நேரில் கண்டு அனுபவித்ததும் சரி, இப்போது கனவில் அவரைக் கண்டு அனுபவிப்பதும் இரண்டுமே எனக்கு இன்பந்தான்."

சாலமன் பாப்பையா உரை

"பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) நனவினான் கண்டதூஉம் (இனிது) ஆங்கே - முன் நனவின்கண் அவரைக் கண்டு நுகர்ந்த இன்பந்தானும் இனிதாயிற்று, அப்பொழுதே; கனவும் தான் கண்டபொழுதே இனிது - இன்று கனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும் அக் கண்டபொழுதே இனிதாயிற்று. அதனான் எனக்கு இரண்டும் ஒத்தன. (இனிது' என்பது முன்னும் கூட்டப்பட்டது. கனவு -ஆகுபெயர். முன்னும் யான் பெற்றது இவ்வளவே, இன்னும் அது கொண்டு ஆற்றுவல்' என்பதாம்.). "

பாரி மேலகர் உரை

"மணக்குடவர் உரை: நனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும் அப்பொழுதைக்கு இன்பமாம்; அதுபோலக் கனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும் கண்ட அப்பொழுதைக்கு இன்பமாம். இது கனவிற் புணர்ச்சி இன்பம் தருமோவென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. "

மணி குடவர் உரை

"திருக்குறளார் வீ. முனிசாமி உரை: நனவுப் பொழுதில் அவரைக் கண்டு நுகர்ந்த காம இன்பம் தானும் அப்போது இனிதாக இருந்தது. இப்போது நான் கனவில் கண்டு நுகர்ந்த இன்பமும் அது கண்டபோதே இனிதாகத்தான் இருந்தது எனக்கு இரண்டும் ஒத்திருந்தன. "

வி முனுசாமி உரை

Nanavinaal Kantadhooum Aange Kanavundhaan
Kanta Pozhudhe Inidhu

Couplet

As what I then beheld in waking hour was sweet,So pleasant dreams in hour of sleep my spirit greet

Translation

Dream-sight of him delights at once Awake-What of seeing him -hence

Explanation

I saw him in my waking hours, and then it was pleasant; I see him just now in my dream, and it is (equally) pleasant

56

Write Your Comment