திருக்குறள் 1208: எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ — காதலர் செய்யும் சிறப்பு.

Thirukkural Verse 1208

திருக்குறள் 1208 — நினைந்தவர் புலம்பல் (Sad Memories), காமத்துப்பால்.

எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ

காதலர் செய்யும் சிறப்பு.

கலைஞர் உரை

எவ்வளவு அதிகமாக நினைத்தாலும், அதற்காகக் காதலர் என் மீது சினம் கொள்ளமாட்டார். அவர் எனக்குச் செய்யும் பெரும் உதவி அதுவல்லவா?

மு. வரதராசன் உரை

காதலரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும் அவர் என்மேல் சினங்கொள்ளார்; காதலர் செய்யும் சிறந்த உதவி அத்தன்மையானது அன்றோ!

சாலமன் பாப்பையா உரை

அவரை நான் எப்படி எண்ணினாலும் கோபப்படமாட்டார்; அன்புள்ள அவர் எனக்குத் தரும் இன்பம் அத்தகையது அன்றோ!

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: (இத்துன்பம் அறிந்து வந்து காதலர் நினக்கு இன்பம் செய்வர் என்றாட்குச் சொல்லியது.) எனைத்து நினைப்பினும் காயார் - தம்மை யான் எத்துணையும் மிக நினைந்தாலும் அதற்கு வெகுளார்; காதலர் செய்யும் சிறப்பு அனைத்து அன்றோ-காதலர் எனக்குச் செய்யும் இன்பமாவது அவ்வளவன்றோ? (வெகுளாமை:அதற்கு உடன்பட்டு நெஞ்சின் கண் நிற்றல். தனக்கு அவ்வின்பத்திற் சிறந்தது இன்மையின் அதனைச் 'சிறப்பு' என்றாள். 'காதலர் நம்மாட்டருள்' என்றும் 'செய்யுங் குணம்' என்றும் பாடம் ஓதுவாரும் உளர். தோழி கூறிய அதனைக் குறிப்பான் இகழ்ந்து கூறியவாறு.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: யாம் காதலரை எவ்வளவு நினைப்பினும் வெகுளார்; அவ்வளவன்றோ அவர் செய்யும் அருள். அருள் செய்தலாவது குற்றம் கண்டாலும் வெகுளாமை.

வீ. முனிசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: தலைவரை யான் எத்துணை அதிகமாக நினைத்தாலும் அதற்க்கு அவர் கோபிக்கமாட்டார். அதனால் காதலர் எனக்குச் செய்யும் சிறப்பான இன்பம் அத்தகையதல்லவா?.

Enaiththu Ninaippinum Kaayaar Anaiththandro

Kaadhalar Seyyum Sirappu

Couplet

My frequent thought no wrath excites It is not so?This honour doth my love on me bestow

Translation

I bring him to ceaseless memory He chides not; and thus honours me

Explanation

He will not be angry however much I may think of him; is it not so much the delight my beloved

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்

செத்தான் செயக்கிடந்தது இல்.

Vaiththaanvaai Saandra Perumporul Aqdhunnaan

Seththaan Seyakkitandhadhu Il

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.