மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன் — உள்ளினும் உள்ளம் சுடும். | குறள் எண் - 1207

Thirukkural Verse 1207

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்

உள்ளினும் உள்ளம் சுடும்.

கலைஞர் உரை

மறதி என்பதே இல்லாமல் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே பிரிவுத்துன்பம் சுட்டுப் பொசுக்குகிறதே! பினைக்காமல் மறந்துவிட்டால் என்ன ஆகுமோ?

மு. வரதராசன் உரை

( காதலரை ) மறந்தறியாமல் நினைத்தாலும் உள்ளத்தைப் பிரிவுத் துன்பம் சுடுகின்றதே! நினைக்காமல் மறந்து விட்டால் என்ன ஆவேனோ?

சாலமன் பாப்பையா உரை

அந்த நாள்களின் நினைவுகளை மறவாமல் நினைத்தாலும் என் நெஞ்சு சுடும்; அப்படி இருக்க மறந்தால் வாழ்வது எப்படி?

பாரி மேலகர் உரை

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) மறப்பு அறியேன் உள்ளினும் உள்ளம் சுடும் - அவ்வின்பத்தை மறத்தலறியேனாய் இன்று உள்ளாநிற்கவும் பிரிவு என் உள்ளத்தைச் சுடாநின்றது; மறப்பின் எவனாவன் - அங்ஙனம் பிரிவாற்றாத யான் மறந்தால் இறந்து படாது உளேனாவது எத்தால்? (மறக்கப்படுவது அதிகாரத்தான் வந்தது. 'மன்' ஈண்டும் அதுபட நின்று ஒழியிசையாயிற்று. கொல்: அசைநிலை.).

மணி குடவர் உரை

மணக்குடவர் உரை: அவரை மறந்தால் என்னாவன் கொல்லோ: மறப்பறியேனாய் நினைக்கவும் இக்காமம் நெஞ்சத்தைச் சுடாநின்றது. இது சீரியன உள்ளிப் பூரியன மறத்தல் வேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

வி முனுசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: முன்பு நுகர்ந்த இன்பத்தினை மறக்காமல் நினைத்துக் கொண்டிருந்தாலும் பிரிவுத் துன்பம் எனது உள்ளத்தினைச் சுட்டு விடுகின்றது; அவ்வாறு இருக்க, அதனை மறந்தால் எவ்வாறு உயிர்வாழ்வேன்?.

Marappin Evanaavan Markol Marappariyen

Ullinum Ullam Sutum

Couplet

If I remembered not what were I then? And yet,The fiery smart of what my spirit knows not to forget

Translation

What will happen if I forget When his memory burns my heart?

Explanation

I have never forgotten (the pleasure); even to think of it burns my soul; could I live, if I should ever forget it ?

Comments (1)

Jivin Tella
Jivin Tella
jivin tella verified

1 month ago

This verse speaks volumes. We need more reminders like this in today’s fast-paced world.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல்.

Innaasey Thaarai Oruththal Avarnaana

Nannayanj Cheydhu Vital

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.