அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் — குழல்போலும் கொல்லும் படை. | குறள் எண் - 1228

Thirukkural Verse 1228

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்

குழல்போலும் கொல்லும் படை.

கலைஞர் உரை

காதலர் பிரிவால் என்னைத் தணலாகச் சுடுகின்ற மாலைப்பொழுதை அறிவிக்கும் தூதாக வருவது போல வரும் ஆயனின் புல்லாங்குழலோசை என்னைக் கொல்லும் படைக்கருவியின் ஓசைபோல் அல்லவா காதில் ஒலிக்கிறது

மு. வரதராசன் உரை

ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருத்தும்‌ மாலைப்பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும்‌‌ படையாகவும் வருகின்றது.

சாலமன் பாப்பையா உரை

முன்பு இனிதாய் ஒலித்த ஆயனின் புல்லாங்குழல் இப்போது நெருப்பாய்ச் சுடும் மாலைப் பொழுதிற்கு் தூதானது மட்டும் அன்றி, என்னைக் கொல்லும் ஆயுதமுமாகிவிட்டது.

பாரி மேலகர் உரை

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) ஆயன் குழல் - முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன் குழல்; அழல் போலும் மாலைக்குத் தூதாகி - இது பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய்; கொல்லும்படை-அது வந்து என்னை கொல்வுழிக் கொல்லும் படையும் ஆயிற்று. (பின்னின்ற 'போலும்' என்பது உரையசை. முன்னரே வரவுணர்த்தலின் தூதாயிற்று; கோறற் கருவியாகலின் படையாயிற்று. 'தானே சுடவல்ல மாலை, இத்துணையும் பெற்றால் என் செய்யாது'? என்பதாம்.).

மணி குடவர் உரை

மணக்குடவர் உரை: நெருப்பையொத்த இம்மாலைப் பொழுதிற்கு முன்பு தூதாகி வந்து இப்பொழுது கொல்லுதற்குப் படையுமாகி வரவல்லது ஆயன் ஊதுங்குழலோ?. இப்பொழுது வருத்துதலின் படை என்றாள்.

வி முனுசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: முன்பெல்லாம் இனியதாய் வந்த ஆயன்குழல் இப்போது அழல்போலச் சுடுவதாயும், மாலைக்குத் தூதுமாகி, அம் மாவை வந்து என்னைக் கொல்லுகிறபோது அதற்குத் துணையாகக் கொலை செய்யும் கருவியுமாயிற்று.

Azhalpolum Maalaikkuth Thoodhaaki Aayan

Kuzhalpolum Kollum Patai

Couplet

The shepherd's pipe is like a murderous weapon, to my ear,For it proclaims the hour of ev'ning's fiery anguish near

Translation

A deadly arm, this shepherd's flute Hails flaming eve and slays my heart

Explanation

The shepherd's flute now sounds as a fiery forerunner of night, and is become a weapon that slays (me)

Comments (1)

Lakshit Brar
Lakshit Brar
lakshit brar verified

4 weeks ago

Such clarity and depth! Every time I read this, I gain a new perspective.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே

செய்தற் கரிய செயல்.

Eydhar Kariyadhu Iyaindhakkaal Annilaiye

Seydhar Kariya Seyal

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.