பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித் — துன்பம் வளர வரும். | குறள் எண் - 1223

Thirukkural Verse 1223

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.

பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்

துன்பம் வளர வரும்.

கலைஞர் உரை

பக்கத்தில் என் காதலர் இருந்த போது பயந்து, பசலை நிறத்துடன் வந்த மாலைப் பொழுது, இப்போது என் உயிரை வெறுக்குமளவுக்குத் துன்பத்தை மிகுதியாகக் கொண்டு வருகிறது

மு. வரதராசன் உரை

பனி தோன்றிப் பசந்த நிறம் கொண்ட மாலைப் பொழுது எனக்கு வருத்தம் ஏற்பட்டுத் துன்பம் மேன்மேலும் வளரும்படியாக வருகின்றது.

சாலமன் பாப்பையா உரை

அவர் என்னைப் பிரிவதற்கு முன்பு என்முன் வரவே நடுக்கம் எய்தி மேனி கறுத்து வந்த இந்த மாலைப் பொழுது இப்போது எனக்குச் சாவு வரும்படி தோன்றி, அதற்கான துன்பம் பெருகும்படி நாளும் வருகின்றது.

பாரி மேலகர் உரை

பரிமேலழகர் உரை: (ஆற்றல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது.) பனி அரும்பிப் பைதல்கொள் மாலை - காதலர் கூடிய நாளெல்லாம் என்முன் நடுக்கம் எய்திப் பசந்து வந்த மாலை; துனி அரும்பித் துன்பம் வளர வரும் - இந்நாள் எனக்கு இறந்துபாடு வந்து தோன்றி அதற்கு உளதாம் துன்பம் ஒரு காலைக்கு ஒருகால் மிக வாராநின்றது. (குளிர்ச்சி தோன்ற மயங்கிவருமாலை என்னுஞ் செம்பொருள் இக்குறிப்புணர நின்றது. துனி - உயிர் வாழ்தற்கண் வெறுப்பு. 'அதனால் பயன் ஆற்றுமாறு என்னை'? என்பது குறிப்பெச்சம்.).

மணி குடவர் உரை

மணக்குடவர் உரை: நெருநல் எனக்கு நடுக்கத்தை யுண்டாக்கித் தானும் புன்மை கொண்டிருந்த மாலைப்பொழுது இன்றும் எனக்கு வெறுப்புத்தோன்றி வருத்தம் மிகும்படியாக வாரா நின்றது. இது முன்னை ஞான்று மாலையாலடர்ப்புண்ட தலைமகள் பிற்றைஞான்று மாலை வருவது கண்டு கூறியது.

வி முனுசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: காதலர் கூடிய நாளெல்லாம் என்முன் நடுக்கமுற்று பசந்துவந்த மாலைப் பொழுது இந்நாள் எனக்கு உயிர்வாழ்வதில் வெறுப்புண்டாக்கித் துன்பம் ஒரு காலைக் கொருகால் மிகுதியாகுமாறு வருகின்றது.

Paniarumpip Paidhalkol Maalai Thuniarumpith

Thunpam Valara Varum

Couplet

With buds of chilly dew wan evening's shade enclose;My anguish buds space and all my sorrow grows

Translation

Wet eve came pale and trembling then Now it makes bold with growing pain

Explanation

The evening that (once) came in with trembling and dimness (now) brings me an aversion for life and increasing sorrow

Comments (2)

Zoya Samra
Zoya Samra
zoya samra verified

4 weeks ago

What a beautiful thought! The poet's ability to express deep meaning in few words is just remarkable.

Nehmat Chandran
Nehmat Chandran
nehmat chandran verified

4 weeks ago

Aathichudi always leaves a strong impression on me. This one teaches discipline in such a simple yet effective way.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்

துறந்தார் அவர்என்பார் இல்.

Pasandhaal Ivalenpadhu Allaal Ivalaith

Thurandhaar Avarenpaar Il

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.