புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல் — வன்கண்ண தோநின் துணை. | குறள் எண் - 1222

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.
கலைஞர் உரை
மயங்கும் மாலைப் பொழுதே! நீயும் எம்மைப் போல் துன்பப்படுகின்றாயே! எம் காதலர் போல் உன் துணையும் இரக்கம் அற்றதோ?
மு. வரதராசன் உரை
மயங்கிய மாலைப்பொழுதே! நீயும் எம்மைப்போல் துன்பப்படுகின்றாயே! உன் துணையும் எம் காதலர் போல் இரக்கம் அற்றதோ?
சாலமன் பாப்பையா உரை
பகலும் இரவுமாய் மயங்கும் மாலைப்பொழுதே! என்னைப் போலவே நீயும் ஒளி இழந்த கண்ணோடு இருக்கிறாயே; உன் கணவரும் என் கணவரைப் போல் கொடியவரோ?
பாரி மேலகர் உரை
பரிமேலழகர் உரை: (தன்னுட் கையாற்றை அதன்மேலிட்டுச் சொல்லியது.) மருள்மாலை - மயங்கிய மாலாய்; புன்கண்ணை -நீயும் எம்போலப் புன்கணுடையையாயிருந்தாய்; நின் துணை எம்கேள்போல் வன்கண்ணதோ - நின் துணையும் எம் துணை போல வன்கண்மையுடையதோ? கூறுவாயாக. (மயங்குதல் - பகலும் இரவும் தம்முள்ளே விரவுதல்; கலங்குதலும் தோன்ற நின்றது. புன்கண் - ஒளியிழத்தல்; அதுபற்றித் துணையும் உண்டாக்கிக் கூறினாள். எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. எமக்குத் துன்பஞ் செய்தாய்; நீயும் இன்பமுற்றிலை என்னும் குறிப்பால் 'வாழி' என்றாள்.).
மணி குடவர் உரை
மணக்குடவர் உரை: மயங்கிய மாலைப்பொழுதே! நீ வாழ்வாயாக; புன்கண்மையை யுடையையாயிருந்தாய்; எம்முடைய கேளிரைப் போல வன்கண்மையை யுடைத்தோ நின்துணையும். இது தன்னுட்கையாறெய்திடு கிளவி.
வி முனுசாமி உரை
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: மயங்கிய மாலைப் பொழுதே! நீயும் எம்மைப்போல ஒளியிழந்த கண்களையுடையதாக இருக்கின்றாய்; உன் துணையும் எம்முடைய துணையே போல் வன்கண்மையுடைதோ? இரக்கமற்றதோ?.
Punkannai Vaazhi Marulmaalai Emkelpol
Vankanna Thonin Thunai
Couplet
Thine eye is sad; Hail, doubtful hour of eventide!Of cruel eye, as is my spouse, is too thy bride
Translation
Hail sad eventide dim and grim Has your mate like mine, cruel whim!
Explanation
A long life to you, O dark evening! You are sightless Is your help-mate (also) as hard-hearted as mine
Comments (2)

Aarush Mane
4 weeks ago
A brilliant expression of character and virtue. It’s a guidepost for living an ethical life.
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.
Ollumvaa Yellaam Vinainandre Ollaakkaal
Sellumvaai Nokkich Cheyal
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.
Kismat Brar
4 weeks ago
What a beautiful thought! The poet's ability to express deep meaning in few words is just remarkable.