திருக்குறள் 1196: ஒருதலையான் இன்னாது காமம்காப் போல — இருதலை யானும் இனிது.
திருக்குறள் 1196 — தனிப்படர் மிகுதி (The Solitary Anguish), காமத்துப்பால்.
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது.
கலைஞர் உரை
காவடித் தண்டின் இரண்டு பக்கங்களும் ஒரே அளவு கனமாக இருப்பதுபோல், காதலும் ஆண், பெண் எனும் இருவரிடத்திலும் மலர வேண்டும்; ஒரு பக்கம் மட்டுமே ஏற்படும் காதலால் பயனுமில்லை; துயரமும் உருவாகும்
மு. வரதராசன் உரை
காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பமானது; காவடியின் பாரம் போல் இருபக்கமாகவும் ஒத்திருப்பது இன்பமானதாகும்.
சாலமன் பாப்பையா உரை
ஆண், பெண் என்னும் இரு பக்கத்தில் ஒரு பக்கம் மட்டுமே காதல் இருந்தால் அது கொடுமை காவடியின் பாரத்தைப் போல இருபக்கமும் இருந்தால்தான் இனிது.
பரிமேலழகர் உரை
பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) காமம் ஒரு தலையான் இன்னாது - மகளிர் ஆடவர் என்னும் இரு தலையினும் வேட்கை ஒருதலைக்கண்ணேயாயின், அஃது இன்னாது; காப்போல இருதலையானும் இனிது - காவினது பாரம்போல இருதலைக்கண்ணும் ஒப்பின் அஃது இனிது. (மூன்றன் உருபுகள் ஏழன் பொருண்மைக் கண் வந்தன. கா -ஆகுபெயர். 'என்மாட்டு உண்டாய வேட்கை அவர் மாட்டும்உண்டாயின், யான் இவ்வாறு துன்பமுழத்தல் கூடுமோ'?என்பதாம்.).
மணக்குடவர் உரை
மணக்குடவர் உரை: ஒருதலை அன்பினாலுண்டாகிய காமம் இன்னாது: காவினது பாரம்போல இரண்டு தலையும் ஒத்த அன்பினா லுண்டாகிய காமமே இனிதாவது. இது மேற்கூறிய சொற்கேட்ட தலைவர் அருள் செய்வாரென்றும் தெய்வக் குறிப்பினாற் கூறிய சொற்கேட்டுக் கூடினாலும் பயனில்லை யென்றும் தலைமகள் கூறியது.
வீ. முனிசாமி உரை
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: காதலர் இருவரிடமும் இருக்க வேண்டிய காம வேட்கை ஒருவரிடம் மட்டும் உண்டானால் அது துன்பமானதாகும். காவடித் தண்டின் பாரம் போல இரு பக்கமும் ஓத்திருந்தால் அது இனிமையானதாகும்.
Orudhalaiyaan Innaadhu Kaamamkaap Pola
Irudhalai Yaanum Inidhu
Couplet
Love on one side is bad; like balanced loadBy porter borne, love on both sides is good
Translation
One sided pains; love in both souls Poises well like shoulder poles
Explanation
Lust, like the weight of the KAVADI, pains if it lies in one end only but pleases if it is in both
Comments (2)
Taimur Vala
1 year ago
This Kural offers profound wisdom about life. It truly reflects the values we should carry every day. It's amazing how relevant this remains even in modern times.
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்.
Ootalin Thondrum Sirudhuni Nallali
Vaatinum Paatu Perum
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.
Abram Dhingra
1 year ago
This Kural offers profound wisdom about life. It truly reflects the values we should carry every day. It's amazing how relevant this remains even in modern times.