நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை. | குறள் எண் - 1195

naamkaadhal-kontaar-namakkevan-seypavo-thaamkaadhal-kollaak-katai-1195

54

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை.

"நான் விரும்பிக் காதல் கொள்வது போன்று அவர் என்னை விரும்பிக் காதல் கொள்ளாத நிலையில் அவரால் எனக்கு என்ன இன்பம் கிடைக்கப் போகிறது?"

கலைஞர் உரை

"நாம் காதல் கொண்ட காதலர் தாமும் அவ்வாறே நம்மிடம் காதல் கொள்ளாதபோது, நமக்கு அவர் என்ன நன்மை செய்வார்?"

மு. வரதராசன் உரை

"நாம் காதலித்தவர் நம்மைக் காதலிக்கவில்லை என்றால் நமக்கு எத்தகைய மகிழ்ச்சியைத் தருவார்?"

சாலமன் பாப்பையா உரை

"பரிமேலழகர் உரை: ('அவர்மேற் காதலுடைமையின் அவர் கருத்தறிந்து ஆற்றினாய்', என்ற தோழிக்குச் சொல்லியது.) நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்ப - நம்மால் காதல் செய்யப்பட்டவர் நமக்கு என்ன இன்பத்தைச் செய்வர்; தாம் காதல் கொள்ளாக்கடை - அவ்வாறே தாமும் நம்கண் காதல் செய்யாவழி. (எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'அக்காதல் உடைமையால் நாம் பெற்றது துன்பமே' என்பதாம்.). "

பாரி மேலகர் உரை

"மணக்குடவர் உரை: நாம் காதலித்தார் நமக்கு யாதினைச் செய்வர்: தாம் காதலியாதவிடத்து. "

மணி குடவர் உரை

"திருக்குறளார் வீ. முனிசாமி உரை: காதலர் தாமும் நம்மிடத்தில் காதல் கொள்ளாமற்போனால் நம்முடைய காதலினைக்கொண்டுள்ள காதலர் நமக்கு என்ன இன்பத்தினைச் செய்து விடுவார்?. "

வி முனுசாமி உரை

Naamkaadhal Kontaar Namakkevan Seypavo
Thaamkaadhal Kollaak Katai

Couplet

From him I love to me what gain can be,Unless, as I love him, he loveth me

Translation

What can our lover do us now If he does not requite our love?

Explanation

He who is beloved by me, what will he do to me, if I am not beloved by him ?

54

Write Your Comment