திருக்குறள் 1193: வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே — வாழுநம் என்னும் செருக்கு.
திருக்குறள் 1193 — தனிப்படர் மிகுதி (The Solitary Anguish), காமத்துப்பால்.
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு.
கலைஞர் உரை
காதலன்பில் கட்டுண்டு பிரியாமல் இணைந்திருப்பவர்களுக்குத்தான் இன்புற்று வாழ்கிறோம் எனும் பெருமிதம் ஏற்படும்
மு. வரதராசன் உரை
காதலரால் விரும்பப்படுகின்றவர்க்கும் ( பிரிவுத் துன்பம் இருந்தாலும்) மீண்டும் வந்தபின் வாழ்வோம் என்று இருக்கும் செருக்குத் தகும்.
சாலமன் பாப்பையா உரை
தாம் விரும்பும் கணவனால் விரும்பப்பட்ட பெண்ணுக்கே (எப்படியும் விரைவில் அவர் வருவார் என்ற உறுதியினால்) வாழ்வோம் என்னும் செருக்கு, பொருத்தமாக இருக்கும்.
பரிமேலழகர் உரை
பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) வீழுநர் வீழப்படுவார்க்கு அமையுமே - தாம் விழையும் கணவரான் விழையப்படும் மகளிர்க்கு ஏற்புடைத்து ; வாழுநம் என்னும் செருக்கு - காதலர் பிரிந்தாராயினும் நம்மை நினைந்து கடிதின் வருவர்; வந்தால் நாம் இன்புற்று வாழ்தும் என்றிருக்கும் தருக்கு. ('நாம் அவரான் வீழப்படாமையின், நமக்கு அமைவது இறந்துபாடு' என்பதாம்.).
மணக்குடவர் உரை
மணக்குடவர் உரை: தாம் காதலித்தாரால் காதலிக்கப்படுவார்க்கு உலகின்கண் இருந்து உயிர்வாழ்வேமென்னுங் களிப்பு அமையும். இது, தலைமகள், இருந்தாலும் பயனில்லை: அதிற்சாதல் அமையுமென்று வாழ்க்கையை முனிந்து தோழிக்குக் கூறியது.
வீ. முனிசாமி உரை
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: தாம் காதலிக்கும் தலைவரால் காதலிக்கப்படும் மகளிர்க்குப் பொருத்தமானது என்னவென்றால் காதலர் பிரிந்திருந்தாராயினும் நம்மை நினைத்து விரைவில் வருவார். வந்தால் நாம் இன்புற்று வாழ்வோம் என்று இருக்கின்ற செருக்காகும்.
Veezhunar Veezhap Patuvaarkku Amaiyume
Vaazhunam Ennum Serukku
Couplet
Who love and are beloved to them aloneBelongs the boast, 'We've made life's very joys our own.'
Translation
The pride of living is for those Whose love is returned by love so close
Explanation
The pride that says "we shall live" suits only those who are loved by their beloved (husbands)
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.
Aramporul Inpam Uyirachcham Naankin
Thirandherindhu Therap Patum
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.
Oorja Bera
1 year ago
What a beautiful thought! The poet's ability to express deep meaning in few words is just remarkable.