திருக்குறள் 488: செறுநரைக் காணின் சுமக்க இறுவரை — காணின் கிழக்காம் தலை.

Thirukkural Verse 488

திருக்குறள் 488 — காலமறிதல் (Knowing the fitting Time), பொருட்பால்.

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை

காணின் கிழக்காம் தலை.

கலைஞர் உரை

பகைவர்க்கு முடிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக் கவிழ்ந்திடும் உரிய நேரம் வரும் வரையில் தங்களின் பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும்

மு. வரதராசன் உரை

பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும், அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்த போது அவருடைய தலை கீழே விழும்.

சாலமன் பாப்பையா உரை

பகைவர்க்கு அழிவுகாலம் வரும்வரை அவரைக் கண்டால் பணிக; அழிவுகாலம் வரும்போது தடை இன்றி அழிந்தபோவர்.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: செறுநரைக் காணின் சுமக்க - தாம் வெல்லக்கருதிய அரசர் பகைவருக்கு இறுதிக் காலம் வருந்துணையும் அவரைக் கண்டால் பணிக, இறுவரை காணின் தலை கிழக்கு ஆம் - பணியவே,அக்காலம் வந்திறும் வழி அவர் தகைவின்றி இறுவர். ('பகைமை ஒழியும் வகை மிகவும் தாழ்க' என்பார், 'சுமக்க' என்றும், அங்ஙனம் தாழவே, அவர் தம்மைக்காத்தல் இகழ்வர் ஆகலின் தப்பாமல் கெடுவர் என்பார், 'அவர் தலை கீழாம்' என்றும் கூறினார். தலைமேற்கொண்டதொரு பொருளைத் தள்ளுங்கால், அது தன் தலைகீழாக விழுமாகலின், அவ்வியல்பு பெறப்பட்டது. இவை இரண்டு பாட்டானும் இருக்கும்வழிப் பகைமை தோன்றாமல் இருக்க என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: பகைவரைக் கண்டானாயின் தலையினாற் சுமக்க; இறுமளவாகின் தலை கீழாய் விடலாம்.

Serunaraik Kaanin Sumakka Iruvarai

Kaanin Kizhakkaam Thalai

Couplet

If foes' detested form they see, with patience let them bear;When fateful hour at last they spy,- the head lies there

Translation

Bear with hostiles when you meet them Fell down their head in fateful time

Explanation

If one meets his enemy, let him show him all respect, until the time for his destruction is come; when that is come, his head will be easily brought low

Comments (2)

Priyansh Som
Priyansh Som
priyansh som verified

1 year ago

Absolutely love this one. It reminds me of the core values my grandparents taught me.

Samarth Singhal
Samarth Singhal
samarth singhal verified

1 year ago

I find this poem very motivating. It pushes us to be more honest and kind in our actions.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

செவுக்குண வில்லாத போழ்து சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும்.

Sevikkuna Villaadha Pozhdhu Siridhu

Vayitrukkum Eeyap Patum

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.