திருக்குறள் 575: கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல் — புண்ணென்று உணரப் படும்
திருக்குறள் 575 — கண்ணோட்டம் (Benignity), பொருட்பால்.
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்
கலைஞர் உரை
கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும் இல்லையானால் அது கண் அல்ல; புண்
மு. வரதராசன் உரை
ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம் என்னும் பண்பே, அஃது இல்லையானால் புண் என்று உணரப்படும்.
சாலமன் பாப்பையா உரை
ஒருவன் கண்ணிற்கு அணியும் நகை கண்ணோட்டமே; அந்த நகை மட்டும் இல்லை என்றால் அது புண் என்று பெரியோரால் அறியப்படும்.
பரிமேலழகர் உரை
பரிமேலழகர் உரை: கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் - ஒருவன் கண்ணிற்கு அணியும்கலமாவது கண்ணோட்டம்; அஃது இன்றேல் புண் என்று உணரப்படும் - அக்கலம் இல்லையாயின் அஃது அறிவு உடையரால் புண் என்று அறியப்படும். (வேறு அணிகலம் இன்மையின் 'கண்ணிற்கு அணிகலம்' என்றும், கண்ணாய்த் தோன்றினும் நோய்களானும் புலன் பற்றலானும் துயர் விளைத்தல் நோக்கி, 'புண் என்று உணரப்படும்' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் ஓடாது நின்றகண்ணின் குற்றம் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
மணக்குடவர் உரை: கண்ணிற்கு அழகு செய்யும் அணிகலமாவது கண்ணோட்டமுடைமை: அஃதில்லையாயின் அவை புண்ணென்றறியப்படும். இது கண்ணோட்டமில்லாத கண்ணிற்குப் பெயர் கூறிற்று.
Kannirku Anikalam Kannottam Aqdhindrel
Punnendru Unarap Patum
Couplet
Benignity is eyes' adorning grace;Without it eyes are wounds disfiguring face
Translation
Kind looks are jewels for eyes to wear Without them they are felt as sore
Explanation
Kind looks are the ornaments of the eyes; without these they will be considered (by the wise) to be merely two sores
Comments (2)
Akarsh Varma
1 year ago
Aathichudi always leaves a strong impression on me. This one teaches discipline in such a simple yet effective way.
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.
Itipurindhu Ellunj Chol Ketpar
Matipurindhu Maanta Ugnatri Lavar
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.
Elakshi Badal
1 year ago
Aathichudi always leaves a strong impression on me. This one teaches discipline in such a simple yet effective way.