திருக்குறள் 572: கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார் — உண்மை நிலக்குப் பொறை.

Thirukkural Verse 572

திருக்குறள் 572 — கண்ணோட்டம் (Benignity), பொருட்பால்.

கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்

உண்மை நிலக்குப் பொறை.

கலைஞர் உரை

அன்புடன் அரவணைத்து இரக்கம் காட்டும் கண்ணோட்டம் எனப்படும் உலகியலுக்கு, மாறாக இருப்பவர்கள் இந்தப் பூமிக்குச் சுமையாவார்கள்

மு. வரதராசன் உரை

கண்ணோட்டத்தினால் உலகியல் நடைபெறுகின்றது, கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருத்தல் நிலத்திற்குச் சுமையே தவிர வேறு பயனில்லை.

சாலமன் பாப்பையா உரை

மக்கள் வாழ்க்கை கண்ணோட்டத்தால்தான் இயங்குகின்றது அக்கண்ணோட்டம் இல்லாதவர் வாழ்வது இப்பூமிக்கு பாரமே.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: உலகியல் கண்ணோட்டத்து உள்ளது - உலகநடை கண்ணோட்டத்தின் கண்ணே நிகழ்வது; அஃது இலார் உண்மை நிலக்குப் பொறை - ஆகலான், அக்கண்ணோட்டம் இல்லாதார் உளராதல் இந்நிலத்திற்குப் பாரமாதற்கே, பிறிதொன்றற்கு அன்று. (உலகநடையாவது: ஒப்புரவு செய்தல், புறந்தருதல், பிழைத்தன பொறுத்தல் என்ற இவை முதலாயின. அவை நிகழாமையால் தமக்கும் பிறர்க்கும் பயன்படார் என்பதுபற்றி, 'நிலக்குப்பொறை' என்றார். 'அதற்கு' என்பது சொல்லெச்சம். இவை இரண்டு பாட்டானும் கண்ணோட்டத்தது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: உலகநடை கண்ணோட்டத்தின்கண்ணது: ஆதலால், அஃதில்லாதார் உளராயிருத்தல் நிலத்துக்குப் பாரமாம். இது கண்ணோட்டமில்லாதாரை நிலம் பொறாதென்றது.

Kannottath Thulladhu Ulakiyal Aqdhilaar

Unmai Nilakkup Porai

Couplet

The world goes on its wonted way, since grace benign is there;All other men are burthen for the earth to bear

Translation

World lives by looks of lovely worth Who lack them are burdens of earth

Explanation

The prosperity of the world springs from the kindliness, the existence of those who have no (kindliness) is a burden to the earth

Comments (1)

Samarth Handa
Samarth Handa
samarth handa verified

1 year ago

I find this poem very motivating. It pushes us to be more honest and kind in our actions.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.

Piravip Perungatal Neendhuvar Neendhaar

Iraivan Atiseraa Thaar

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.