திருக்குறள் 988: இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும் — திண்மை உண் டாகப் பெறின்.
திருக்குறள் 988 — சான்றாண்மை (Perfectness), பொருட்பால்.
இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மை உண் டாகப் பெறின்.
கலைஞர் உரை
சால்பு என்கிற உறுதியைச் செல்வமெனக் கொண்டவருக்கு வறுமை என்பது இழிவு தரக் கூடியதல்ல
மு. வரதராசன் உரை
சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.
சாலமன் பாப்பையா உரை
சான்றாண்மை எனப்படும் மன ஆற்றல் மட்டும் ஒருவனிடம் இருந்து விடுமானால், வறுமை அவனுக்கு இழிவு ஆகாது.
பரிமேலழகர் உரை
பரிமேலழகர் உரை: சால்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - சால்பு என்று சொல்லப்படும் வலி உண்டாகப்பெறின்; ஒருவற்கு இன்மை இளிவு அன்று - ஒருவனுக்கு நல்குரவு இளிவாகாது. (தளராமை நாட்டுதலின், வலியாயிற்று. இன்மையான் வருவதனை இன்மை தானாக உபசரித்துக் கூறினார். சால்புடையார் நல்கூர்ந்தவழியும் மேம்படுதலுடையார் என்பதாம்.).
மணக்குடவர் உரை
மணக்குடவர் உரை: ஒருவனுக்குச் சால்பாகிய நிலை உண்டாகப் பெறின் பொருளின்மை இளிவாகாது. இஃது அமைதியுடையராதல் பெறுதற்கரிதென்றது.
Inmai Oruvarku Ilivandru Saalpennum
Thinmai Un Taakap Perin
Couplet
To soul with perfect virtue's strength endued,Brings no disgrace the lack of every earthly good
Translation
No shame there is in poverty To one strong in good quality
Explanation
Poverty is no disgrace to one who abounds in good qualities
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்.
Kutiseyvaark Killai Paruvam Matiseydhu
Maanang Karudhak Ketum
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.
Mehul Kar
1 year ago
A brilliant expression of character and virtue. It’s a guidepost for living an ethical life.