பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா — உய்வில்நோய் என்கண் நிறுத்து. | குறள் எண் - 1174

Thirukkural Verse 1174

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா

உய்வில்நோய் என்கண் நிறுத்து.

கலைஞர் உரை

தப்பிப் பிழைக்க முடியாத, தீராத காதல் நோயை எனக்குத் தருவதற்குக் காரணமான என் கண்கள், தாமும் அழ முடியாமல் வற்றிப் போய்விட்டன

மு. வரதராசன் உரை

என் கண்கள், தப்பிப் பிழைக்க முடியாத தீராத காமநோயை என்னிடத்தில் உண்டாக்கி நிறுத்திவிட்டு, தாமும் அழமுடியாமல் நீர் வறண்டு விட்டன.

சாலமன் பாப்பையா உரை

மை தீட்டப்பட்ட இந்தக் கண்கள் நான் தப்பிக்கவும், வாழவும் முடியாத காதல் துன்பத்தை எனக்குத் தந்துவிட்டுத் தாமும் அழ முடியாமல் நீர் வற்றிப் போய்விட்டன.

பாரி மேலகர் உரை

பரிமேலழகர் உரை: (இதுவும் அது). உண்கண் -உண்கண்கள்; உயலாற்றா உய்வு இல் நோய் செய்வன. என் கண் நிறுத்து-அன்று யான் உய்ய மாட்டாமைக்கு ஏதுவாய ஒழிவில்லாத நோயை என் கண்ணே நிறுத்தி; பெயலாற்றா நீர் உலந்த - தாமும் அழுதலை மாட்டாவண்ணம் நீர் வற்றிவிட்டன. (நிறுத்தல்: பிரிதலும் பின் கூடாமையும் உடையாரைக் காட்டி அதனால் நிலைபெறச் செய்தல். 'முன் எனக்கு இன்னாதன செய்தலாற் பின் தமக்கு இன்னாதன தாமே வந்தன' என்பதாம்.)

மணி குடவர் உரை

மணக்குடவர் உரை: உயல் ஆற்றாத என்மாட்டு உய்வில்லாத நோயை உண்கண்கள் நிறுத்தித் தாமும் அழமாட்டாவாய் நீருலந்தன. கண்கள் தாம் நினைத்தது முடித்துத் தொழின்மாறினவென்று கூறியவாறு.

வி முனுசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: மையுண்ட கண்கள் நீக்க முடியாத காமநோயினை என்னிடம் நிறுத்தித் தாமும் அழமுடியாதபடி நீர்வற்றி இருக்கின்றன.

Peyalaatraa Neerulandha Unkan Uyalaatraa

Uyvilnoi Enkan Niruththu

Couplet

Those eyes have wept till all the fount of tears is dry,That brought upon me pain that knows no remedy

Translation

These eyes left me to endless grief Crying adry without relief

Explanation

These painted eyes have caused me a lasting mortal disease; and now they can weep no more, the tears having dried up

Comments (2)

Darshit Bava
Darshit Bava
darshit bava verified

4 weeks ago

Really appreciate the wisdom here. Makes me want to follow this guidance in daily life.

Lavanya Kuruvilla
Lavanya Kuruvilla
lavanya kuruvilla verified

4 weeks ago

So much truth in this couplet. The poet captured an eternal value in just two lines.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

Tharkaaththuth Tharkontaar Penith Thakaisaandra

Sorkaaththuch Chorvilaal Pen

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.